ரஷ்யா ஏன்?

Jai Best Education Consultancy

ரஷ்யாவில் மாணவர்கள் ஐரோப்பிய முறைப்படி(European System) 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். ரஷ்ய மருத்துவக் கல்வி உலகத்தரம் வாய்ந்தவை, மேலும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள நாடாகும். ரஷ்யாவில் அனைத்து மருத்துவ பல்கலைக்கழகங்களும், மருத்துவமனைகளும் அந்நாட்டு அரசாங்கத்தால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய மக்கள் அனைத்து அயல்நாட்டு மாணவர்களிடமும் அன்பாக பழகக்கூடியவர்கள். மேலும் கல்லூரிகளில் மலேசியா, ஸ்ரீலங்கா, பிரேசில், நேபால், பங்களாதேஷ், நைஜீரியா போன்ற 25-க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் படிக்கின்றனர். ஆகவே மாணவ/மாணவிகள் போதுமான உலக அறிவையும், வாழ்க்கையில் எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திறமையை வளர்த்துக் கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

யுனெஸ்கொ(Unesco) மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) வரிசை படுத்தப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகங்களில் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் முக்கிய இடங்களை பிடித்துள்ளன. அகில இந்திய மருத்துவ குழுவால்(MCI-MEDICAL COUNCIL OF INDIA) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே The Study Abroad- ன் மூலம் மாணவ மாணவிகள் அனுப்பப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஐரோப்பிய பட்டங்கள்(European Degree) வழங்கப்படுவதால் அவர்கள் உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் வேலை பார்பதற்கு தோதுவாக உள்ளது. இந்தியாவில் சட்டபூர்வமாக மருத்துவராக பணியாற்றுவதற்கு இந்திய மருத்துவ குழுவால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தகுதி சான்றிதழ் & MCI-தேர்வு.

இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு மருத்துவ மேற்படிப்புக்காக செல்லும் மாணவ/மாணவிகள் அகில இந்திய மருத்துவ குழுவில், தான் இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கிறேன் என்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்(Eligibility Certificate) வழங்ப்படும். ரஷ்யா மட்டுமல்லாது இந்தியாவை தவிர்த்து மற்ற அயல்நாடுகளில் படிக்கும் அனைத்து இந்திய மாணவ/மானவிகளுக்கும் இதே வழிமுறை கடந்த 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.


எங்கள் The Study Abroad நிறுவனத்தின் மூலம் மேற்படிப்புக்கு ரஷ்யா செல்லும் மாணவ/மாணவிகளுக்கு இந்திய மருத்துவ குழுவில்(MCI) பதிவு செய்து தரப்படும் அல்லது அதற்கு தேவையான உதவிகளும், ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாது இந்திய மருத்துவ குழுவால் நடத்தப்படும் தேர்வில்(Screening Test) தேர்ச்சி பெற தேவையான பயிற்சிகளும், உதவிகளும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மாணவ/மாணவிகள் கவலைப்படத் தேவையில்லை. அகில இந்திய மருத்துவக் குழுவில் பதிவு செய்வதற்குத் தேவையான படிவத்தினை(MCI-FORM) இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.